அமுல் நிறுவனத்துடன் நந்தி இணைப்பு இல்லை : முதல்வர்.

கர்நாடக பால் உற்பத்தியாளர்களின் ஒருங்கிணைப்பான நந்தினியை குஜராத்தின் அமுல் நிறுவனத்துடன் சேர்ப்பது இல்லை என முதல்வர் பசவராஜ் பொம்மை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நகரில் இன்று செய்தியாளர்களிடம் இது குறித்து தெரிவித்த முதல்வர் பசவராஜ் பொம்மை நந்தினி நிறுவனம் தன்னுடைய சொந்த முக்யத்வத்தை காப்பாற்றிக்கொள்ள உள்ளது. ஆனால் இந்த நிறுவனத்தை அமுல் நிறுவனத்துடன் சேர்ப்பது போன்ற செய்திகள் தவறான கற்பனைகள்.நந்தினி நிறுவனம் வேறொரு நிறுவனத்துடன் சேர்க்கப்படும் என யாரும் கற்பனை செய்து கருத்துக்கள் தெரிவிக்கக்கூடாது . மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் இது குறித்து தெரிவித்திருப்பது நம்பகமானது. நந்தினி மற்றும் அமுல் இரண்டு நிறுவனங்களும் சந்தையில் ஒன்றுக்கொன்று ஒத்துழைத்து முன்னடக்க வேண்டும்.இவை இரண்டுமே பெரிய நிறுவனங்கள். எனவே ஒத்துழைப்புடன் பணியாற்றவேண்டும். இதன் பொருள் நிறுவனங்களை ஒன்றிணைப்பது என்றில்லை. நந்தினி நிறுவனம் இன்னும் நூறாண்டுகாலத்திற்கு நிரந்தரமாக நிலைக்கும். இந்த விஷயத்தில் எந்த ஒரு பிரச்னையும் இல்லை . சில பிரிவுகளில் இரண்டு நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் லாபம் அடைய வழிகள் உள்ளது. நந்தினியும் அமுல் நிறுவனமும் தொழில் நுட்பரீதியில் சுமுக முடிவுகளை எடுக்க முடியும். இந்த நோக்கில் நிர்வாக ரீதியில் இரண்டு நிறுவனங்களும் ஒருங்கிணைய வேண்டும். ஆனால் இந்த விஷயத்தில் தவறான செய்திகளை பரப்புவதிலோ அரசியல் செய்வதற்கோ எந்த காரணமும் இல்லை. நான் முதல்வராக தெரிவிப்பது என்னவென்றால் நந்தினி நிறுவனம் தன்னுடைய தனி தகுதியை தொடர்ந்து காப்பாற்றிக்கொள்ளும் . இவ்வாறு முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.