அமெரிக்கர்களை வெளியேற்றுவது குறித்து ஆய்வு

வாஷிங்டன், அக். 26- இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயோன போர் தீவிரமடையும்பட்சத்தில், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கர்களை வெளியேற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய்வதற்கு அதிபர் ஜோ பிடன் நிர்வாகம் தயாராகி வருகிறது.அமெரிக்க உயரதிகாரிகளை மேற்கோள் காட்டி வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளதாவது-அமெரிக்க ஆயுதங்கள் மற்றும் ராணுவ ஆலோசகர்களின் உதவியுடன் இஸ்ரேலிய படைகள் காசாவுக்குள் புகுந்து ஹமாஸ் தீவிரவாதிகள் மீது தரைவழியாக தாக்குதல் நடத்த தயாராகி வருகிறது.
ஹமாஸ் தீவிரவாதிகள் அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலிய எல்லைக்குள் புகுந்து 1,400 பேரை கொடூரமாக கொலை செய்ததையடுத்து போர் நடவடிக்கையை இஸ்ரேலிய அரசு தீவிரமாக்கியுள்ளது.
இந்த போரால் பாதிக்கப்படும் காசா மக்களுக்கு ஆதரவாக ஈரான், லெபனான் கருத்து தெரிவித்து வருகின்றன. இந்த ஆதரவு குரல் அரபு நாடுகள் மத்தியில் இன்னும் விரிவடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.