அமெரிக்காவின் கைப்பாவையாக ஐ.நா.பொதுச் செயலாளர் செயல்படுகிறார்

பியோங்யாங், நவ. 21- தென்கொரியா மற்றும் அமெரிக்காவை மிரட்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
அண்மையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைக்கு நடத்திய வடகொரியாவுக்கு ஐநா.சபை கண்டனம் தெரிவித்தது. எந்தவொரு ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்வதை வடகொரியா உடனடியாக கைவிட வேண்டும்.
ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தமது அறிக்கையில் வலியுறுத்தி இருந்தார்.
வட கொரியா வெளியுறவு அமைச்சர் சோ சோன் ஹுய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.நா. சாசனத்தின் நோக்கம் மற்றும் கொள்கைகள் உள்பட அனைத்து விஷயங்களிலும் பாரபட்சமற்ற தன்மை மற்றும் சமத்துவத்தைப் பேணுவதே சரியான பணி என்று கூறியுள்ளார்.