அமெரிக்காவிற்கு சீனா அனுப்பிய பயோ வைரஸ்.. வுஹானில் உருவாக்கப்பட்டது?

நியூயார்க், ஜூன் 10- அமெரிக்காவிற்குள் அபாயகரமான பயோ ஆயுதம்.. அதாவது பயோ வைரஸ் கிருமியை கடத்தியதாக இன்னொரு சீன ஆராய்ச்சி மாணவர் கைது செய்யப்பட்டு உள்ளார். பெடரல் அதிகாரிகளுக்கு தவறான தகவல்களை அளித்ததாக கூறி சீனாவைச் சேர்ந்த ஒருவரை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவர் ஒரு முனைவர் பட்ட மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட வுஹான் பல்கலைக்கழக மாணவர் வுஹான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக இருக்கும் செங்சுவான் ஹான், என்பவர் ஜூன் 8-ம் தேதி டெட்ராய்ட் மெட்ரோபொலிட்டன் விமான நிலையத்திற்கு வந்தபோது எப்பிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவிற்குள் பொருட்களை கடத்தியது மற்றும் தவறான அறிக்கைகளை சமர்ப்பித்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவை இரண்டும் கடுமையான குற்றங்கள் என்று அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இவருக்கு நேரடியாக வுஹான் ஆராய்ச்சி மையத்தோடு தொடர்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த பயோ ஆயுதம் வுஹானில் உருவாக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. வுஹான் ஆராய்ச்சி பயோ ஆயுதம் இந்த பயோ ஆயுதத்தை கடத்த மூளையாக செயல்பட்ட யுன்கிங் ஜியான் என்ற அந்த நபர், “ஃபியூசேரியம் கிராமினியரம்” எனப்படும் ஆபத்தான பூஞ்சையை அமெரிக்காவிற்குள் கடத்தியதாக கூறப்படுகிறது. இது ஒரு விவசாய பயங்கரவாத கிருமி ஆகும். மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் வைத்து அதை ஆராய்ச்சி செய்வதற்காக அவர் இந்த செயலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பூஞ்சையினால் கோதுமை, பார்லி, சோளம் மற்றும் அரிசி போன்ற பயிர்களுக்கு “ஹெட் பிளைட்” என்ற நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இது மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் கடுமையான உடல்நல பிரச்சனைகளை உண்டாக்கும். மேலும், ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் பில்லியன் கணக்கான பொருளாதார இழப்புகளுக்கு இது காரணமாகிறது.