அமெரிக்காவில் இந்தியமாணவர் மர்மச்சாவு

நியூயார்க்: பிப்.3
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் சின்சினாட்டியில் உள்ள பல்கலைக்கழகத்தில் இந்தியா வம்சாவளியை சேர்ந்த மாணவர் ஷ்ரேயாஸ் ரெட்டி பெனிகெரி என்பவர் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். மாணவர் உயிரிழப்புக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. தகவல் அறிந்து விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘துரதிஷ்டவசமாக ஸ்ரேயாஸ் ரெட்டி பெனிகரி என்ற மாணவர் உயிரிழந்த சம்பவம் ஆழ்ந்த வேதனை ஏற்படுத்தி உள்ளது.போலீஸ் விசாரணை நடந்து வருகின்றது.
உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருடன் இந்திய தூதரகம் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. அமெரிக்காவில் ஒரே மாதத்தில் 4வது இந்திய மாணவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.