அமெரிக்காவில் சுவாரசியம்

வாஷிங்டன், ஜன.7-ஒரு அமெரிக்கப் பெண் டெக்சாஸில் புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். காளி ஜோ ஸ்காட் தனது முதல் பெண் குழந்தையான அன்னி ஜோவை டிசம்பர் 31 ஆம் தேதி நள்ளிரவு 11:55 மணிக்கு பெற்றெடுத்தார். பின்னர் ஜனவரி 1 ஆம் தேதி நள்ளிரவு 12:01 மணிக்கு தனது இரண்டாவது பெண் குழந்தையான எபி ரோஸைப் பெற்றெடுத்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பிறக்கும் போது இரு குழந்தைகளுக்கும் இடையேயான நேர வேறுபாடு 6 நிமிடங்கள் இருந்தாலும், முதல் குழந்தை துல்லியமாக 2022ம் ஆண்டிலும், இரண்டாவது குழந்தை 2023ம் ஆண்டிலும் பிறந்துள்ளன. இது அரிய நிகழ்வாகும். நள்ளிரவிலேயே குழந்தைகள் பிறக்கும் என்று தம்பதியினர் எதிர்பார்த்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.