
நியூயார்க்: நவம்பர் 3-
அமெரிக்காவின் கரோலினாவில் மிகப்பிரம்மாண்டமாக முருகன் கோவில் கட்டப்படுவது பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சமூக ஊடகங்களில் இந்தியர்களுக்கு எதிராக அமெரிக்காவில் கடுமையான வெறுப்பு பதிவு செய்யப்படும் நிலையில் இந்தியர்களுக்கு எதிரான வெறுப்பின் புதிய இலக்காக இந்த கோவில் மாறியுள்ளது. டெக்சாஸ் ஹனுமான் சிலை மற்றும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்குப் பிறகு, கரோலினாவில் கட்டப்பட்டு வரும் முருகன் கோவில் இப்போது புயலை கிளப்பி உள்ளது. 2018 இல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் கோவில் வேகமாக கட்டப்பட்டு வருகிறது. உலகின் மிக உயரமான முருகன் சிலை இங்கே அமைக்கப்பட உள்ளது. அதேபோல் ஒரு தமிழ்க் கலாச்சார அருங்காட்சியகம் மற்றும் ஒரு தமிழ் நூலகம் ஆகியவை இடம்பெறும். அமெரிக்காவில் முருகன் கோவில் பத்திரிகையாளர் ஸ்டீபன் ஹார்ன் இது தொடர்பாக செய்துள்ள போஸ்டில், கோவில் இன்னும் முழுமையாக கட்டப்படாமல் இருந்தாலும், கட்டுமான பணிகளுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இதற்கான அமைப்பு ஒன்று நிதி திரட்டி வருகிறது. தனியார் நிலத்தில் இதை கட்டுகிறார்கள். வட கரோலினாவின் மோன்கூர் என்ற நகரத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த இந்துக்கள் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளனர். தமிழர்கள் தங்கள் “போர்க்கடவுளான” முருகனின் உலகின் மிகப்பெரிய சிலையை இங்கே உருவாக்க திட்டமிட்டுள்ளனர், இது லிபர்ட்டி சிலையை விட உயரமாக இருக்கும்” என்று குறிப்பிட்டார். அவரின் இந்த போஸ்ட்தான் இப்போது வைரலாகி உள்ளது. இந்தியர்கள் மீது கடும் வெறுப்பு ஏற்கனவே டிரம்ப் ஆதரவாளர்கள் மூலம் இந்தியர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. டிரம்ப் ஆதரவாளர்கள் தீவிர வலதுசாரிகள். அவர்களுக்கு அமெரிக்கர்கள் – வெள்ளை அமெரிக்கர்கள் மட்டுமே முதல். மற்ற நாட்டினர் யாரையும் அவர்கள் மதிக்க மாட்டார்கள். இத்தனை காலம் டிரம்ப் ஆதரவாளர்களின் எதிர்ப்பாக கறுப்பின அமெரிக்கர்கள் இருந்தனர். இப்போது அதே வெள்ளை அமெரிக்கர்கள் இந்தியர்களை எதிர்க்க தொடங்கி உள்ளனர்.

















