அமெரிக்காவில் வணிக வளாகம் அருகே திடீர் துப்பாக்கி சூடு; 3 பேர் பலி

அட்லாண்டா, செப்டம்பர். 24 – அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் அட்லாண்டா நகரில் தென்மேற்கே இவான்ஸ் தெருவில் வணிக வளாகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பகுதியருகே 3 பேர் வந்துள்ளனர்.அவர்களில் ஒருவர் திடீரென துப்பாக்கியை எடுத்து மற்ற 2 பேரை நோக்கி சுட்டுள்ளார். இதனால், உஷாரான அவர்கள் இருவரில் ஒருவரும் கைத்துப்பாக்கியை எடுத்து பதிலுக்கு சுட்டுள்ளார்.இதனை பார்த்த அந்த தெருவில் இருந்த மக்கள் அலறியடித்து கொண்டு ஓடினர். இந்த சம்பவத்தில் 17 வயது சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் உடனடியாக சென்று விசாரணையில் ஈடுபட்டனர். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ஒருவருக்கு 20 வயதும், மற்றொருவருக்கு 30 வயதும் ஆகும். எனினும், அவர்களை பற்றிய அடையாளங்களை போலீசார் வெளியிடவில்லை. துப்பாக்கி சூட்டுக்கான பின்னணி பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.