அமெரிக்கா குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத், அக். 6-
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் பாகிஸ்தானுக்கு சீனா கடனுதவி வழங்கி வருகிறது. அதேசமயம் பாகிஸ்தானின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக சீனா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் எழுகின்றன. அந்த வகையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில், ‘பாகிஸ்தானின் ஊடகங்களை சீனா முழுவதும் கட்டுப்படுத்த முயல்கிறது. மேலும் வெளிநாட்டு தகவல்களை கையாளும் முயற்சிகளுக்காக சீனா கோடிக்கணக்கில் பணம் செலவிடுகிறது’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.