அமெரிக்க அதிபரை சந்திக்கிறார்நேட்டோ தலைவர்

வாஷிங்டன், ஜூன் 2 –
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள 100-வது நாளை எட்டியுள்ளது. இந்த போருக்கு மத்தியில், உணவு பாதுகாப்பு நெருக்கடி இன்னும் மோசமடைந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள மக்கள், பெரும்பாலும் கோதுமை, சோளம் மற்றும் அரிசி ஆகிய 3 உணவுகளையே தினசரி உணவாக எடுத்துக் கொள்கின்றனர். உலகில் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் மக்கள் தொகையால், இந்த மூன்று உணவுப் பொருட்களே உணவாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. அமெரிக்காவின் விவசாயத் துறை மதிப்பீடுகளின்படி, கோதுமை உற்பத்தி இந்த ஆண்டு நான்கு மில்லியன் டன்கள் குறையும், அதாவது 0.51 சதவீதம் குறையும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதேபோல், மக்காச்சோள உற்பத்தியில் ஓரளவு சரிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அரிசி உற்பத்தி 515 மில்லியன் டன்களை தொட்டு சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட உணவு உற்பத்தியில் சரிவு என்பது குறைவாகவே உள்ளது. ஆனால், உக்ரைன் – ரஷியா போரால் உணவு ஏற்றுமதி தடைபட்டுள்ளதால், உணவு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள குறைவான சரிவு கூட அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.