அமெரிக்க இறுதி சடங்கு நிகழ்வில்திடீர் துப்பாக்கிச்சூடு

வாஷிங்டன், ஜூன் 3 -அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இந்த நிலையில், விஸ்கான்சின் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற இறுதிச் சடங்கு நிகழ்வின் போது மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் காயமடைந்துள்ளதாக காவல்துறை மற்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பிற்பகல் 2:26 மணிக்கு கிரேஸ்லேண்ட் கல்லறையில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இதில் எத்தனை பேர் காயமடைந்துள்ளனர் என்ற விபரம் தெளிவாக
தெரியவில்லை. அமெரிக்காவில் கடந்த மாதம் தொடக்கப்பள்ளி மற்றும் பல்பொருள் அங்காடியில் நடைபெற்ற மோசமான துப்பாக்கிச்சூடு தாக்குதல்களில் மாணவர்கள் உட்பட 31 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கி கலாச்சாரம் ஒழிய வேண்டும் என்பது அங்குள்ளவர்களின் கோரிக்கையாக உள்ளது