அமெரிக்க நெருக்கடியால் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் சம்மதம்

வாஷிங்டன்: மே 30
காசா-மே 30 இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் வேண்டும் என்று சர்வதேச நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் அமெரிக்கா மேற்கொண்ட முயற்சியில், ஏற்கெனவே ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது இஸ்ரேலும் ஒப்புதல் தெரிவித்திருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.
காசாவை முழுமையாக கைப்பற்றுவோம் என்று இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு கூறியிருந்தார். இது மத்திய கிழக்கில் ஏற்கெனவே இருந்த பதற்றத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றது. இந்நிலையில், போர் நிறுத்தம் தொடர்பான திட்டத்தை அமெரிக்கா முன்வைத்திருந்தது. இந்த திட்டத்தை சமீபத்தில் ஹமாஸ் ஏற்றுக்கொண்டது. ஆனால் இஸ்ரேல் வாய் திறக்காமல் இருந்தது. போர் நிறுத்த திட்டம் இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்காஃப் முன்வைத்த போர் நிறுத்த ஒப்பந்த திட்டத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதாக நெதன்யாகு கூறியிருப்பதாக இஸ்ரேலிய செய்தி ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. ஹமாஸ் வசம் பணய கைதிகளாக இருக்கும் தங்கள் உறவினர்களை மீட்க வேண்டும் என்று இஸ்ரேலிய மக்கள் போராடி வருகின்றனர். அவர்களை நேற்று சந்தித்து பேசிய நெதன்யாகு, அமெரிக்காவின் போர் நிறுத்த திட்டத்தை ஏற்றுக்கொண்டோம் என கூறியுள்ளார். அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை Recommended For You “24 மணி நேரம்தான் டைம்.. ஆர்த்திக்கு கெடு விதித்த ரவி மோகன்.. முடிவுக்கு வந்த பிரச்சனை” இருப்பினும் இஸ்ரேலிய பிரதமர் அலுவலகமோ, நெதன்யாகுவோ இது குறித்து வெளிப்படையாக எதையும் தெரிவிக்கவில்லை. ஆனால் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இஸ்ரேல் கையெழுத்திட்டிருக்கிறது என்று அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறியிருக்கிறார். இந்த ஒப்பந்தத்தில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது? என்பது குறித்து வெள்ளை மாளிகை விரிவாக எதையும் தெரிவிக்கவில்லை.