அமைச்சருக்கு எதிராக சமூகவலைதளத்தில் அவதூறு-நபர் கைது

பெங்களூர் : டிசம்பர். 16 – மாநில எரிசக்தி அமைச்சர் கே ஜெ ஜார்ஜுக்கு எதிராக சமூக வலைதளத்தில்அவதூறு தகவல் அனுப்பிய முன்னாள் மாநகராட்சி உறுப்பினர் பாரத ராஷ்ட்ர சமிதி உறுப்பினர் தகவல் தொழில் நுட்ப ஊழியரை கிழக்கு பிரிவு சைபர் குற்ற போலீசார் கைது செய்துள்ளனர். தெலுங்கானா மாநிலத்தின் கரீம்நகர் பகுதியை சேர்ந்த ரவிகாந்த ஷர்மா ( 33) என்பவர் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி . தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கே சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரதீய ராஷ்ட்ர சமிதியின் தகவல் தொழில் நுட்ப ஊழியராக இருந்த குற்றவாளியின் தாய் தந்தை இருவரும் முன்னாள் மாநகராட்சி உறுப்பினர்களாவர். குற்றவாளி ரவிகாந்தா தெலுங்கானா சட்டமன்ற தேர்தலின் போது இந்த அவதூறு தகவலை அனுப்பியுள்ளான். கர்நாட மாநில அரசின் மின் விநியோகம் மற்றும் கிருஹ ஜ்யோதி திட்டடங்கள் குறித்து போலி வீடியோ பதிவு ஒன்றை அனுப்பியுள்ளான். இது குறித்து நகரின் கிழக்கு பிரிவு saibar போலிஸாருக்கு புகார் அளிக்கப்பட்டிருந்தது. பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்து கொண்ட போலீசார் குற்றவாளியை கைது செய்துள்ளனர்.