அமைச்சரை நீக்க கோரிக்கை

பெங்களூர்: மே. 25 – பாட புத்தகங்கள் மறு பரிசீலனை குழுவின் செயல்களுக்காக கல்வி துறை அமைச்சர் பி சி நாகேஷ் பல பொய்களை கூறியிருப்பதால் உடனே அவரை அமைச்சரவை பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என கர்நாடக ரக்ஷனா வேதிகே தலைவர் டி ஏ நாராயணகௌடா வற்புறுத்தியுள்ளார். முதல்வர் பசவராஜ் பொம்மை உடனே பர்கூறு ராமச்சத்திரப்பா , தேவனூரு மகாதேவா ஆகியோர் உட்பட இலக்கியவாதிகள் , கல்வி துறை வல்லுனர்களின் கூட்டம் நடத்தி பாட புத்தகங்கள் விவகாரத்தை சரி படுத்த வேண்டும் . நாட்டு விரோதியின் தலைமையில் உள்ள பாட புத்தகங்கள் மறுபரிசீலனை கமிட்டியை ரத்து செய்ய வேண்டும். மொழி பற்றுதல் , மாநிலம் சந்தித்து வரும் பிரச்சனைகள் இவை குறித்து பாட புத்தகங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. நாட்டு விரோதிகள் இத்தகைய செயல்களில் ஈடு படுவார்கள். கன்னட மொழி என்பது இந்திய நோக்கிற்கு சரியானதே தவிர இதுவே வழிகாட்டியே தவிர தேசியத்திற்கு எதிரானதல்ல என நாராயணகௌடா தன் ட்விட்டர் செய்தியில் வெளியிட்டுள்ளார்.