அமைச்சர்கள் பட்டியலுக்கு இறுதி வடிவம் – ஓரிரு நாளில் பதவி ஏற்பு

புதுடெல்லி, மே 25:
கர்நாடக மந்திரி சபை விரிவாக்கம் குறித்து முதல்வர் சித்தராமையா துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் டெல்லியில் காங்கிரஸ் மேல் இடத்தில் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர் இன்று மாலைக்குள் மந்திரிகள் பட்டியில் இறுதி வடிவம் பெறும் என்று தெரிகிறது. இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் புதிய மந்திரிகள் பதவி ஏற்க இருப்பதாக காங்கிரஸ் வட்டாரம் தெரிவித்தது
அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவகுமார் நேற்று டெல்லி சென்றனர்.அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் இரவு வரை தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.இக்கூட்டத்தில் யாருக்கு அமைச்சர் பதவி, யாருக்கு எந்த இலாகா வழங்குவது, பெரும்பாலான அமைச்சர்களின் பெயர்கள் இறுதி செய்யப்படும் என ஆலோசிக்கப்பட்டது.
ஆனால் அமைச்சர்கள் பட்டியல் இறுதி செய்யப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எல்லாம் எதிர்பார்த்தது போல் இன்று பெரும்பாலான அமைச்சரவை விரிவாக்கப் பணிகள் முடிந்து இன்னும் 2-3 நாட்களில் புதிய அமைச்சர்கள் பதிவு ஏற்க இருப்பதாக தெரிகிறது
ஒருபுறம் அமைச்சர் பதவிக்கு மூத்த எம்.எல்.ஏ.க்கள் வற்புறுத்தினாலும், மறுபுறம் புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என எம்.எல்.ஏ.க்கள் மேலிடத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். இதுதவிர, முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரும், தங்களின் நெருங்கிய ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்க துடித்து வருகின்றனர். இதன் மூலம் தங்கள் ஆதரவு மந்திரிகளின் பலத்தை நிரூபிக்கவும் இவர்கள் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது
வீழ்ந்துள்ளனர். எனவே புதிய மந்திரிகள் பட்டியல் தயாரிப்பது கட்சி மேடைக்கு பெரும் சவாலாக உள்ளது என்றாலும் இந்த பணிகள் என்று இரவுக்குள் முடியும் என தெரிகிறது. இதற்கிடையே அமைச்சர் பதவி கேட்டு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலர் போர்க்கொடி தூக்கி இருப்பது காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மந்திரி பதவி கிடைக்காதவர்களை எப்படி சமாதானப்படுத்துவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது