அமைச்சர் சுதாகர் ராஜினாமா செய்ய வேண்டும் – குமாரசாமி

பெங்களூரு, செப். 12-தலித் மக்களை மிகவும் இழிவுபடுத்தி உள்ள அமைச்சர் டி.சுதாகரை அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்து கைது செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வர் எச்.டி. குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தலித்துகளின் பாதுகாப்பு குறித்து அரசு தொடர்ந்து பேசி வருகிறது. தலித்துகளின் பாதுகாப்புக்காக மசோதா கொண்டு வந்ததாகச் சொல்கிறார்கள். சட்டசபையில் துணை சபாநாயகர் மீது காகிதம் வீசியது குறித்து அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா நீண்ட நேரம் பேசினார். ஆனால் தலித்துகளுக்கு பாதுகாப்பு வழங்க அரசு தவறிவிட்டதாக அவர் புகார் கூறினார். வழக்கு பதிவு செய்யப்பட்ட அமைச்சர் சுதாகர் சில அமைச்சர்களை சந்தித்து பேசியது தெரிந்ததே. வழக்கை மூடி மறைக்க உள்துறை அமைச்சரின் வீட்டிற்கு செல்லவில்லை என்றும், வழக்கு பதிவு செய்த அதிகாரியை அமைச்சர் சுதாகர் மிரட்டியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இது தலித் விரோத அரசு என்றும், இந்த அரசுக்கு கண்ணியம் இருந்தால் அமைச்சர் சுதாகரை ஒரு நிமிடம் கூட அமைச்சரவையில் வைக்கக் கூடாது என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.