அமைச்சர் பதவி நீக்கம்

டெல் அவிவ்,: ஜனவரி. 23 –
இஸ்ரேலில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, உள்துறை அமைச்சரை பிரதமர் நேதன்யாகு பதவி நீக்கம் செய்தார்.இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு நீதித்துறையின் அதிகாரத்தை குறைத்து அரசியல்வாதிகளுக்கு கூடுதல் அதிகாரம் அளிப்பது தொடர்பான சர்ச்சை உருவாகி உள்ளது. இதனால் நாட்டின் ஜனநாயக அடிப்படைகளுக்கு ஆபத்து ஏற்படும் என்று அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.