அமைச்சர் பொன்முடி குற்றவாளி

சென்னை: டிசம்பர் . 19 – அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கில் பொன்முடி குற்றம் செய்ததாக தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதில் என்ன தண்டனை கொடுக்கப்படும் என்பதை சென்னை உயர் நீதிமன்றம் நாளை மறுநாள் அறிவிப்பதாக தெரிவித்துள்ளது. இந்த தண்டனையை பொறுத்து அமைச்சர் பொன்முடியின் பதவி மீது முடிவு எடுக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.
கடந்த 13-5-1996 முதல் 31-3-2002 வரையிலான கால கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006ஆம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் போதிய சாட்சியங்கள் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று பொன்முடி விடுதலை செய்யப்பட்டார். வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக அமைச்சர் பொன்முடிக்கு எதிரான இந்த வழக்கு பதியப்பட்டு இருந்தது.
இதில் 172 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு, வாதங்கள் நிறைவடைந்த நிலையில், கடந்த ஜூன் 28ஆம் தேதி வேலூர் கோர்ட் நீதிபதி வசந்த லீலா பிறப்பித்த உத்தரவில், இருவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததாலும், போதிய ஆதாரங்கள் இல்லாததாலும் இருவரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
திருப்பம்: ஆனால்இந்த சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் முறையாக கையாளவில்லை என்றும், மேல்முறையீடு செய்ய ஆர்வம் காட்டவில்லை என்றும் கருதியது சென்னை உயர்நீதிமன்றம். இதனால் சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டை சூ-மோட்டாவாக எடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பதிவு செய்தார். இன்று மதியம் இந்த வழக்கின் விசாரணை எடுத்துக் கொள்ளப்படும் என தெரிகிறது. திமுக கவனம்: பொன்முடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றமே தாமாக முன்வந்து மேல்முறையீட்டு வழக்கை எடுத்துக் கொண்டிருப்பது பொன்முடியை மட்டிமல்ல திமுக தரப்பை அதிர்ச்சியடைய வைத்தது. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வேறு அமர்விற்கு மாற்றப்பட்ட நிலையில் நீதிபதி ஜெயசந்திரன் இந்த வழக்கை விசாரித்தார்.
தீர்ப்பு என்ன?: இந்த அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கில் பொன்முடி குற்றம் செய்ததாக தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதில் என்ன தண்டனை கொடுக்கப்படும் என்பதை சென்னை உயர் நீதிமன்றம் நாளை மறுநாள் அறிவிப்பதாக தெரிவித்துள்ளது. இந்த தண்டனையை பொறுத்து அமைச்சர் பொன்முடியின் பதவி மீது முடிவு எடுக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. 2017 இவருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை செய்த மேல்முறையீடு சரியானது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது அதோடு சொத்து சேர்த்தது உண்மை. இதில் கீழமை கோர்ட் வழங்கிய தீர்ப்பு செல்லாது.
குற்றமற்றவர் என்று கூறி பொன்முடியை விடுதலை செய்தது செல்லாது. இந்த வழக்கில் அவர் சொத்து சேர்த்தது உறுதியானதால் அவரை குற்றம் செய்தவராக தீர்ப்பு அளிக்கிறோம். நாளை மறுநாள் இதில் தண்டனை விவரங்கள் வழங்கப்படும் என்று நீதிபதி ஜெயசந்திரன் தெரிவித்துள்ளார். பதவி பறிபோகிறதா?: இந்த தண்டனையை பொறுத்து அமைச்சர் பொன்முடியின் பதவி மீது முடிவு எடுக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. அமைச்சர் சிறை செல்லும் பட்சத்தில் உடனடியாக அவரின் உயர் கல்வித்துறை அமைச்சர் பதவி பறிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. சட்டப்படி அவசியம் இல்லை என்றாலும்.. நிர்வாக அவசியத்தை கருத்தில் கொண்டு அவரின் அமைச்சர் பதவி உடனடியாக பறிக்கப்படும். அதே சமயம் 2 வருடங்களுக்கு மேல் அவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டால் அவரின் எம்எல்ஏ பதவி உடனே பறிபோகும். அவர் 10 வருடம் தேர்தலில் போட்டியிட முடியாது. இதனால் அவரின் அமைச்சர் பதவி தானாக பறிபோகும்.