அமைச்சர் மீது வழக்கு

மகபூபாபாத்: நவ. 18-
தெலங்கானா மாநிலம், மகபூபாபாத் மாவட்டத்தில் நேற்று பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சி சார்பில் வீடு, வீடாக வாக்கு சேகரிக்கப்பட்டது. அப்போது,கொங்கர கித்தா எனும் கிராமத்தில் பிஆர்எஸ் வேட்பாளர் சங்கர் நாயக்குக்கு ஆதரவாக அமைச்சர் சத்யவதி வாக்கு சேகரித்தார். அப்பகுதி மகளிர் அணியினர், அமைச்சர் சத்ய வதிக்கு ஆரத்தி எடுத்தனர். அப்போது, ரூ.4 ஆயிரத்தை தட்டில் அன்பளிப்பாக வைத்தார் அமைச்சர்.
இதுகுறித்து, தேர்தல் கண்காணிப்பு குழு கொடுத்த புகாரின்பேரில், தேர்தல் விதிமீறல் குற்றச்சாட்டில் கூடுர் போலீஸார் அமைச்சர் சத்யவதி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.