அமைச்சர் ஸ்ரீராமுலு கண்டனம்


ராய்ச்சூர், ஏப்.9- ஊழல்வாதி டி.கே. சிவக்குமாரை அருகில் அமர்த்தியபடி, பிஜேபி அரசு ஊழல் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா பேசுவது வெட்கக் கேடானது, என சமூக நலத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு தெரிவித்தார் ராய்ச்சூரில் அவர் நேற்று கூறியதாவது-
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் காங்கிரஸ் தலைவர் டி .கே சிவகுமார், எவ்வளவு கொள்ளை அடித்தார், அவர் மீது எத்தனை வழக்குகள் பதிவாகி உள்ளன, என்பது மாநில மக்களுக்கு தெரியும். இத்தகைய ஊழல்வாதி அருகில் அமர்த்தியபடி, மாநில பிஜேபி அரசின் ஊழல் பற்றி சித்தராமையா பேசுவது நகைப்புக்குரியது. காங்கிரஸ் 10 சதவீத கமிஷன் அரசாக இருந்தது. அனைத்து அரசு வேலைகளுக்கும் 10 சதவீத கமிஷன் பெற்றது. இப்படிப்பட்ட அரசை நடத்தியவர், தற்போது முதல்வர் எடியூரப்பா, விஜயேந்திரா மீது குற்றம் சாட்டுவது சரியல்ல. இவ்வாறு அவர் கூறினார்.