அயோத்தியில் பக்தர்களுக்கு திருப்பதி லட்டு

திருமலை:ஜன. 19: ராமர் சிலை பிரதிஷ்டை விழாவின்போது, பக்தர்களுக்கு வழங்க ஒரு லட்சம் லட்டுகளை பேக்கிங் செய்யும் பணியில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.உத்தரபிரதேசம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் வரும் 22-ம் தேதி ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்கும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வாரி பிரசாதம் வழங்கப்படவுள்ளது.
இதற்காக 25 கிராம் எடையில் ஒரு லட்சம் லட்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இவற்றை அயோத்தி அனுப்புவதற்கு, பேக்கிங் செய்யும் பணியில் ஸ்ரீவாரி சேவா குழுவைச் சேர்ந்த சுமார் 350 பேர் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு பாக்கெட்டிலும் 2 லட்டுகள் இருக்கும். ஒரு பெட்டியில் 150 பாக்கெட்டுகள் வீதம் 350 பெட்டிகளில் லட்டுகள் பேக்கிங் செய்யும் பணிமும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த லட்டுகள் உடனடியாக அயோத்தி அனுப்பப்படுகின்றன.