அயோத்தியில் பக்தர்கள் வெள்ளம்

அயோத்தி, ஜன.20-
அயோத்தி ராமஜென்ம பூமியில் நாளை மறுநாள் 22ஆம் தேதி ராமர் கோவில் திறக்கப்பட உள்ளது. இதற்கான கும்பாபிஷேக சிறப்பு பூஜைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. ராமஜென்ம பூமியில் ராமர் கோவில் திறப்பு விழா முன்னிட்டு அயோத்தி நகரம் முழுவதும் மணப்பெண் போல் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். நாடு முழுவதும் இருந்தும் அரசியல் கட்சி தலைவர்கள் சினிமா பிரபலங்கள் தொழில் அதிபர்கள் அயோத்தி நகருக்கு படை எடுத்து வருகின்றனர். அயோத்தி நகரம் முழுவதும் காவிமயமாக காட்சியளிக்கிறது. ஜெய் ஸ்ரீராம் கோசங்கள் தொடர்ந்து ஒலித்த வண்ணம் உள்ளன. ராமர் கோவில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சிக்கு
அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு ஏழு நாட்களாக பூஜைகள் நடந்து வருகிறது. இந்த முன்னெப்போதும் இல்லாத தருணத்தைக் காண ராம பக்தர்கள் கால்கடுக்க நிற்கின்றனர்.
ஜனவரி 22-ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு சுவாமிஜிகள், சாது துறவிகள், ஹர்குரு சரமூர்த்திகள், ஆர்எஸ்எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத், பிரபலங்கள், திரைப்பட நட்சத்திரங்கள், விளையாட்டு உலக நட்சத்திரங்கள் மற்றும் பல்வேறு கட்சிகளின் அரசியல்வாதிகள் முன்னிலையில் ராமர் கோவில் திறக்கப்படுகிறது.
ராம் லல்லாவின் சிலை ஓம், விநாயகர், சக்ரா, சங்க், கதா, ஸ்வஸ்திக் மற்றும் கமல நயனா உள்ளிட்ட பல்வேறு மத அடையாளங்களைக் கொண்டுள்ளது. கருங்கல்லால் செதுக்கப்பட்ட இந்த சிலைகள் மஞ்சள் துணியால் கண்கள் கட்டப்பட்டு ரோஜா மலர்களால் மாலை போடப்பட்டுள்ளது என விஷ்வ ஹிந்து பரிஷத் அலுவலக பொறுப்பாளர் ஷரத் சர்மா தெரிவித்தார்.
நின்ற கோலத்தில் ராம் லல்லா சிலை, ராம ஜென்மபூமி கோவிலின் கருவறையில் புதிய ராமர் சிலை நிறுவும் நிகழ்ச்சிக்கு முன் வைக்கப்பட்டது.
மைசூரை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கிய 51 அங்குல ராமர் சிலை கிரேன் மூலம் கோவில் கருவறைக்கு கொண்டு வரப்பட்டது. ராமரின் ‘பிரதிஷ்டை’ அனைவரின் நலனுக்காகவும், தேசத்தின் நலனுக்காகவும், மனிதகுலத்தின் நலனுக்காகவும், இந்தப் பணியில் பங்களித்தவர்களுக்காகவும் செய்யப்படுகிறது என்பதே ‘பிரதான சங்கல்பத்தின்’ கருத்து. கோவிலுக்கு இது தவிர மற்ற மத வழிபாடுகளும் நடந்தன.
நாளை மறுநாள் 22 ஆம் தேதி
மதியம் 12.20 மணிக்கு மகாமஸ்தகாபிஷேகம் நடைபெற உள்ளது.
ஜனவரி 22-ம் தேதி நடைபெறவுள்ள ராமர் கோவில் மகாமஸ்தகாபிஷேக விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார், நாளை மறுநாள் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து கோயில் அறக்கட்டளையின் பொதுச் செயலர் சம்பத் ராய் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மகாமஸ்தகாபிஷேகம் திங்கள்கிழமை மதியம் 12.20 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவிலில் மகாமஸ்தகாபிஷேக சடங்குகள் தொடங்கியுள்ளன. இதனிடையே, கோவிலில் ராம் லல்லா நிறுவப்பட்டுள்ளதாகவும், மகாமஸ்தகாபிஷேக விழாவுக்காக நாடு முழுவதும் காத்திருப்பதாகவும் துணை முதல்வர் பிரஜேஷ் பதக் தெரிவித்தார்.
அயோத்தியில் நடக்கும் ராம்லல்லா பிரதிஷ்டை விழாவிற்கு அனைவரும் செல்ல முடியாது. இந்த முன்னோடியில்லாத நிகழ்ச்சியை பெரிய திரையில் பார்க்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளன. நாட்டின் 70 முக்கிய நகரங்களில் உள்ள 170க்கும் மேற்பட்ட மையங்களில் இந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்படும்.
நிகழ்ச்சியை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை பார்க்கலாம், இதற்கு ரூ.100. டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குளிர்பானங்கள் மற்றும் பாப்கார்ன் ஆகியவை டிக்கெட் விலையில் சேர்க்கப்பட்டுள்ளன.
ராமர் கோவில் திறப்பு விழா பிரதிஷ்டை பூஜைகளில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 24 பூசாரிகள் ராம் லல்லா நிறுவும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். திங்கள்கிழமை நடைபெறவுள்ள கோயில் திறப்பு விழாவைத் தொடர்ந்து நடைபெறும் பல்வேறு சமயச் சடங்குகளில் மாநிலத்தைச் சேர்ந்த 24 அர்ச்சகர்கள் ஈடுபடவுள்ளனர்.
ராமஜென்மபூமி அறக்கட்டளை சார்பில் அனைத்து சமய வழிபாடுகளுக்கும் ராமதாரக ஹோமம், கணபதி ஹோமம், ஹனுமத் விரத ஹோமம் உள்ளிட்ட பல்வேறு சடங்குகள் நடைபெற உள்ளன.இந்நிகழ்ச்சியில் ராய்ச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு அர்ச்சகர்கள் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது