அயோத்தி ராமர் கோயிலுக்கும் அபுதாபி நாராயண் கோயிலுக்குமான ஒற்றுமை

அபுதாபி: பிப். 14: ஐக்கிய அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோயிலின் 10 சிறப்பம்சங்கள் யாவை? கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக அமீரகத்திற்கு முதல் முறையாக வந்திருந்தார். அப்போது அவரிடம் இந்து மக்களுக்காக கோயில் கட்ட வேண்டும் என இந்தியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஐக்கிய அமீரக அரசிடம் கோயிலுக்கு இடம் ஒதுக்குவது குறித்து பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதற்கு ஐக்கிய அமீரக அரசும் அனுமதி அளித்தது. மேலும் அந்த கோயிலை கட்டுவதற்கு துபாய்- அபுதாபி, ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா பகுதியில் 27 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. அபுதாபி அரசு சார்பில் கோயில் கட்ட நிலத்தை அன்பளிப்பாக தருவதற்கான உத்தரவை அன்றைய அபுதாபி பட்டத்து இளவரசராக பொறுப்பில் இருந்த தற்போதைய இளவரசருமான அமீரக அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் பிறப்பித்தார். இந்த கோயிலின் கட்டுமான பணிகளுக்கு மற்றும் நிர்வகிக்க குஜராத்தின் அகமதாபாத்தை சேர்ந்த BAPS (போச்சன்வாசி ஸ்ரீ அக்ஷார் புருஷோத்தம் சுவாமி நாராயண் சன்ஸ்தா) என்ற ஆன்மீக அமைப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து அபுதாபியின் ரக்பா பகுதி அருகே முரைக்காவில் கடந்த சில ஆண்டுகளாக கோயில் கட்டுமான பணிகள் நடந்தன. இந்த கட்டுமான பணிகள் எல்லாம் கடந்த மாதம்தான் முடிவடைந்தன. அபுதாபியின் முதல் இந்து கோயிலை இன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். பிஏபிஎஸ்ஸின் தலைமை குரு மஹான்த் சுவாமி மகராஜ் இந்த கோயில் திறப்பு விழாவை தலைமை தாங்கி பூஜைகளை வழிநடத்துகிறார்.