அயோத்தி ராமர் கோயில் கருவறையில் குழந்தை ராமர் சிலை

அயோத்தி: ஜன. 20 உத்தர பிரதேசம், அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதையொட்டி குழந்தை ராமரின் சிலை நேற்று முன்தினம் மாலைகோயில் கருவறையில் நிறுவப்பட்டது.
4.5 அடி உயரம், 200 கிலோ எடை கொண்ட குழந்தை ராமர், வலது கையில் அம்பையும் இடதுகையில் வில்லையும் ஏந்தி நிற்கிறார். தலையில் தங்க கிரீடம் உள்ளது. சிலையின் தோரணத்தில் கிருஷ்ணரின் 10 அவதாரங்களும் நேர்த்தியாக செதுக்கப்பட்டு உள்ளன.
குழந்தை ராமர் சிலையின் கண்கள் மஞ்சள் துணியால் மூடப்பட்டிருக்கும் புகைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. இதைத் தொடர்ந்து குழந்தை ராமரின் முழு உருவச் சிலை புகைப்படம் நேற்று முதன்முறையாக வெளியானது.