அயோத்தி ராமர் கோவில் அருகே கர்நாடக பக்தர்கள் தங்கும் விடுதி

பெங்களூர் : ஜனவரி. 10 – நாடு முழுக்க வரும் 22 அன்று அயோத்தியாவில் திறக்கப்படவுள்ள ராமர் கோயில் நிகழ்ச்சிகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறது. இந்த தருணத்திற்கு இன்னும் 12 நாட்களே மீதமுள்ள. நிலையில் கர்நாடக மாநில அறநிலையத்துறை மாநில மக்களுக்கு ஒரு இனிப்பு செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது கர்நாடக அறநிலைய துறை சார்பில் கர்நாடக மக்களுக்காக அயோத்யை செல்பவர்களுக்கு தங்கும் இடம் வசதி செய்து கொடுக்க அரசு சார்பில் பயணியர் விடுதிகள் அமைக்க அனுமதி கோரி ஏற்கெனவே மாநில அரசு உத்தர பிரதேச அரசுக்கு மாநில அறநிலையத்துறை கடிதம் எழுதியுள்ளது. மாநிலத்திலிருந்து மிக அதிக அளவில் ராம பக்தர்கள் அயோத்யைக்கு வருவர். இவர்களுக்கு தங்கும் இடம் மற்றும் உணவு வசதிகள் செய்து கொடுக்குமாறு உத்தர பிரதேச அரசுக்கு மாநில அறநிலைய துறை கடிதம் எழுதியுள்ளது . சரயு நதி அருகில் விருந்தினர் விடுதிகள் அமைத்து தருமாறு கடந்த 2023 ஆகஸ்ட் மாத்திலேயே உத்தர பிரதேச அரசுக்கு மாநில முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார். இதே போல் 2020ல் அப்போதைய முதல்வர் எடியூரப்பாவும் உத்தரபிரதேச அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில் தற்போது உத்தரபிரதேச வீடு வசதி வாரியம் இதற்க்கு பதிலளித்துள்ளது.அதன்படி கர்நாடக அரசு நிறுவ உள்ள விருந்தினர் விடுதிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதாக உத்தரப்பிரதேச அரசு அறநிலையத்துறை மற்றும் வீடு வசதி வாரியம் நம்பிக்கை அளித்துள்ளது. இந்த நிலையில் மாநில அறநிலையத்துறையும் அயோத்யாவில் கர்நாடக மாநில மக்களுக்கென தங்கும் விடுதிகள் அமைப்பதில் தீவிரமயுள்ளது. ராமர் கோயில் உள்ள அருகிலேயே சராயு நதிக்கரையில் கர்நாடக மாநில மக்கள் சென்று தங்க வசதிகள் கிடைத்திருப்பது மிகவும் சந்தேஷமான தகவலாகும் .