அரசுக்கு எதிராக ஏபிவிபி ஆவேசம்

பெங்களூர்: ஜூலை. 30 – பி ஜே பி இளம் பிரமுகர் பிரவீன் நெட்டாரு கொலைக்கு எதிராக தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தி ஏ பி வி பி ( அகில இந்திய மாணவர் பரிஷத் ) தொண்டர்கள் மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா வீட்டை இன்று முற்றுகையிட்டு கலவரம் நடத்தி இருப்பது அரசுக்கு ஜீரணிக்க முடியாத விஷயமாகியுள்ளது. பெங்களூரின் ஜெயமஹாலில் உள்ள அமைச்சர் அரக ஞானேந்திரா வீட்டை முற்றுகையிட்டு , வீட்டின் காம்பௌன்ட் சுவரை தாவி குதித்து அங்கிருந்த பூத்தொட்டிகளை உடைத்து எரிந்து கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி இருப்பதுடன் சிலரை தங்கள்வசம் எடுத்துள்ளனர். அமைச்சர் அரக ஞானேந்திராவின் வீட்டை முற்றுகையிட்ட நூற்றுக்கணக்கான ஏ பி வி பி தொண்டர்கள் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. உள்துறையை நிர்வகிப்பதில் அமைச்சர் அரக ஞானேந்திரா தோல்வியடைந்துள்ளார் என தங்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தி அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என வற்புறுத்தினர். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சரியான வகையில் நிர்வகிக்க தவறிய உள்துறை அமைச்சர் உடனே தன் பதவிக்கு ராஜனாமா அளிக்க வேண்டும். இத்துடன் எஸ் டி பி ஐ , பி எப் ஐ ஆகிய இயக்கங்களை தடை செய்ய வேண்டும் என வற்புறுத்திய ஏ பி வி பி தொண்டர்கள் முதல்வர் பசவராஜ் பொம்மை தகுதியற்றவர் எனவும் கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டம் தீவிரமடைந்த நிலையில் ஏ பி வி பி தொண்டர்கள் உள்துறை அமைச்சரின் வீட்டு கேட்டை ஏறி குதித்து உள்ளே நுழைந்தனர். அப்போது அங்கிருந்த போலீசார் ஏ பி வி பி தொண்டர்களை வாயிலில் தடுக்க முயற்சித்தபோது போலீசார் மற்றும் மாணவ தொண்டர்களுக்கிடையில் வாக்குவாதங்கள் மற்றும் ,தள்ளு முல்லு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சில தொண்டர்கள் அமைச்சரின் வீட்டின் அருகில் இருந்த பூ தொட்டிகளை தூக்கி கீழே போட்டு உடைத்து பொடிபொடியாக்கினர். நிலைமையை சமாளிக்க போலீசார் மிதமான தடியடி நடத்தியதுடன் , நூற்றுக்கணக்கான ஏ பி வி பி தொண்டர்களை தங்கள் வசம் எடுத்துள்ளனர். ஏ பி வி பி தொண்டர்கள் தன் வீட்டை முற்றுகையிட்ட நேரத்தில் அமைச்சர் ஞானேந்திரா சிவமொக்கா மாவட்டத்திற்கு சென்றுள்ளார் . பி ஜே பி யின் துணை பிரிவான ஏ பி வி பி தொண்டர்கள் அரசுக்கு எதிராக கிளம்பியிருப்பது மாநில அரசை பெரிய சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.