
ஸ்ரீநகர்:செப். 1: ஜம்மு காஷ்மீரில் மாநில புலனாய்வு அமைப்பு (எஸ்ஐஏ) மற்றும் குற்றப்புலனாய்வு துறை (சிஐடி) ஆகியவை இணைந்து பயங்கரவாதிகளை கைது செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளில் இருந்து தப்பி ஓடி பல ஆண்டுகளாக தேடப்பட்டு வருபவர்களை கைது செய்யும் பணியும் நடந்து வருகிறது. இந்நிலையில் தோடா மாவட்டத்தில் ஆதில் பரூக் பரிதி, ஜாவேத் என்ற முகமது இக்பால், நிஷார் அகமது என்ற முஜாகித் உசேன், தாரிக் உசேன், இஷ்தியாக் அகமது, அஜாஸ்அகமது, ஜமீல் அகமது மற்றும் இஷ்பாக் அகமது என 8 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக நேற்று போலீசார் தெரிவித்தனர்.