அரசு ஊழியர்களுக்கு மோடி தரும் ஜாக்பாட் அறிவிப்பு

சென்னை: அக்டோபர் 9-
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது. 3 சதவிகிதம் வழங்கப்படும் மத்திய அரசின் அமைச்சரவை ஒப்புதல்வழங்கியது. 7வது ஊதியக் குழுவின் கீழ் உள்ளவர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, தற்போது 5வது மற்றும் 6வது ஊதியக் குழுவின் கீழ் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இது நிதி அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட ஒரு அலுவலக மெமோராண்டம் (OM) மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த உயர்வு, 2025 ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
5வது ஊதியக் குழுவின் கீழ் அகவிலைப்படி உயர்வு 5வது மத்திய ஊதியக் குழுவின்படி, முன்-திருத்தப்பட்ட ஊதிய விகிதத்தில் ஊதியம் பெறும் ஊழியர்களுக்கான அகவிலைப்படி 466%இல் இருந்து 474% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சகம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. இது அடிப்படை ஊதியத்தின் சதவிகிதமாக கணக்கிடப்படும். 5வது ஊதியக் குழுவின் 10 ஆண்டு காலம் 2005 டிசம்பரில் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து 6வது ஊதியக் குழு 2006 ஜனவரியில் தொடங்கி 2015 டிசம்பர் வரை நீடித்தது. இருப்பினும், ஒரு சில அரசு ஊழியர்கள் இன்னும் 5வது மற்றும் 6வது ஊதியக் குழுவின் கீழ் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இவர்களின் ஊதியக் கட்டமைப்புகள் இன்னும் இந்த பழைய ஊதியக் குழுக்களின் விதிமுறைகளைப் பின்பற்றுகின்றன. புதிய ஊதியக் குழுவின் காலம் தொடங்கியதும், அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படும். இதன் மூலம், அகவிலைப்படி 55%இல் இருந்து 58% ஆக அதிகரித்தது. இது 7வது ஊதியக் குழுவின் கீழ் கடைசி அகவிலைப்படி திருத்தமாகும். இந்த ஊதியக் குழுவின் காலம் 2025 டிசம்பரில் முடிவடையும். தற்போது, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 8வது ஊதியக் குழுவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு மற்றும் முக்கிய உறுப்பினர்களின் நியமனத்தை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். குழு அமைக்கப்பட்டு செயல்படத் தொடங்கியதும், அதன் அறிக்கையை அரசுக்குச் சமர்ப்பிக்க குறைந்தது 1 முதல் 1.5 ஆண்டுகள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.