அரசு துறைகளின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டியது அவசியம்

பெங்களூர் : செப்டம்பர். 19 – அரசு துறைகளில் லாபமடைந்து பின்னர் அதற்க்கு கரும்புள்ளிகளை கொண்டு வரும் எத்தகையோரையும் சகிக்க முடியாது . அத்தகையவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கி பொதுமக்களின் நம்பிக்கையை காப்பாற்றிக்கொள்ளும் அவசியம் உள்ளது என மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார். ஒத்துழைப்பு தத்துவத்திற்கு எதிராக சுயநல போக்குடன் பேசி கூட்டுறவு போராட்டங்களை அவமதிக்கும் வகையில் நடக்கும் எவ்வித நடவடிக்கைகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்.என அரக ஞானேந்திரா எச்சரித்துள்ளார். மாநில சகோதரத்துவ கூட்டுறவு ஆணையங்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டுப்பணி ஊழியர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியில் தனக்கு அளித்த மரியாதையை ஏற்று அமைச்சர் பேசுகையில் கூட்டுறவு சங்கங்கள் மிகவும் நேர்த்தியான முறையில் செயல்பட வேண்டும். மற்றும் பொது மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றிக்கொள்ள வேண்டும். பிரதமர் நரேந்திர மோதி கூட்டுறவு சங்கங்களின் கிளர்ச்சிகளின் மகத்துவத்தை உணர்ந்து மத்திய அரசில் இதற்கென தனி துறையையே அமைத்திருப்பது பெருமைக்குரிய விஷயம் என அரக ஞானேந்திரா தெரிவித்தார்.