அரசு பள்ளிகளில் முழுமையான ஆரம்ப கல்வி

பெங்களூரு: அக்டோபர். 13 – புதிய தேசிய கல்வி கொள்கைகள் பரிபூர்ணமான கல்வி கொள்கைகளாக உள்ளது என கூறியுள்ள மாஉயர் கல்வி அமைச்சர் டாக்டர் சி ஏன் அஸ்வத்தநாராயணா அரசு பள்ளிகளிள் lமுன்றாவது ஆண்டிற்குள் முழுமையாக ஆரம்ப கல்வி துவங்கப்படும் என தெரிவித்துள்ளார் தரமான கல்வியின் வாயிலாக இந்தியர்களின் ஒன்று பட்ட மேம்பாட்டுக்கு வழிவகை செய்யப்பட உள்ளது. இதனால் மாணவர்களின் எதிர்காலத்திற்கு புதிய கல்வி கொள்கை மிகவும் உதவிகரமாக இருக்கும் என கூறியுள்ளார். பெலகாவியில் இன்று நிருபர்களுடன் பேசுகையில் அமைச்சர் கூறுகையில் ,இந்த புதிய கல்வி கொள்கைகள் குறித்து ஐந்தாறு வருடங்கள் முழு ஆய்வுகள் மேற்கொண்ட பின்னரே நடைமுறைக்கு வந்துள்ளன. என தெரிவித்தார். பெலகாவியில் ஏற்கெனவே உள்ள மென் பொருள் பூங்காவிற்கு மேலும் உயிரூட்டப்படும். இத்துடன் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள மாநில அரசின் 700 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி இங்கு புதிய தகவல் தொழில் நுட்ப பூங்கா நிறுவப்படும். இத்துடன் ஹிரேபாகவாடியில் பல வருடங்களாக கவனிக்கபடாமல் இருந்த வி வி வளாகத்தை அபிவிருத்தி செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் அஸ்வத்தநாராயனா தெரிவித்தார்.