அரசு பஸ்சில் பெண்ணுக்குபாலியல் தொல்லை கொடுத்த நடத்துனர்

ராய்ச்சூர், மார்ச் 12:
நள்ளிரவில் அரசு பேருந்தில் பயணம் செய்த பெண்ணுக்கு நடத்துனர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. ராய்ச்சூரில் இருந்து பெங்களூரு செல்லும் போது நடத்துனர் தனது இடுப்பை தொட்டதாக அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார். நடத்துனர் மீது ராய்ச்சூர் கோட்ட அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் நடத்துனர் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
பிப்ரவரி 18 ஆம் தேதி இரவு, கேஏ-36, எப்-1532 என்ற பேருந்தில் ராய்ச்சூரில் இருந்து பெங்களூருக்கு பெண் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தப்போது, ​​ராய்ச்சூர் நகரப் பிரிவு நடத்துனர் ஒருவர், பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக‌ குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்தப் பெண் ஓட்டுநரின் பின் இருக்கையில் அமர்ந்து பயணித்துள்ளார். தனது இருக்கையில் அமர்ந்திருந்த நடத்துனர் அருகில் இருந்த பெண்ணிடம் பாலியியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இலவச டிக்கெட்டை கிழித்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டதாகவும், டிக்கெட் வேண்டும் என்றால் தான் கூறியபடி நடந்து கொள்ள வேண்டும். இல்லையேல் அபராதம் விதிக்கப்படும் என்றும் வற்புறுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.
அவர் என் பக்கம் திரும்பி இடுப்பில் கை வைத்தார். நான் இதய நோயாளி என்று கூறியும் நடத்துனர் என்னை விடவில்லை. இரவு 8 மணி முதல் அதிகாலை 2 மணி வரை அவர் என்னை துன்புறுத்தினார். நடத்துன‌ர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார்.இந்த குற்றச்சாட்டு குறித்து சம்பந்தப்பட்ட நடத்துனர் லக்ஷ்மிகாந்த ரெட்டி விளக்கம் அளித்துள்ளார். அன்றைய தினம் பேருந்து நெரிசல் இருந்தது. நான் யாரிடமும் தவறாக‌ நடந்து கொள்ளவில்லை. எனது துறையில் இப்படி ஒரு சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்றார்.