அரசை கவிழ்க்கும் முயற்சி தோல்வி

பெங்களூர் : அக்டோபர் . 31 – பி ஜே பியின் ஆபரேஷன் தாமரை குறித்து காங்கிரஸ் தலைவர்கள் விழித்து கொண்டு தகுந்த நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டதால் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பிஜேபி மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளது. மஹாராஷ்டிரா மாதிரியில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசை கவிழ்க்க பிஜேபி முயற்சிகள் மேற்கொண்டு வந்தது. அதன் படி இதற்கு முன்னர் ஆபரேஷன் தாமரை நடத்திய குழுவை கொண்டு பிஜேபி மேலிடம் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கவும் திட்டம் தீட்டி வந்தது. பிஜேபியின் இந்த திட்டங்கள் குறித்து தகவல்கள் அறிந்த காங்கிரஸ் தலைவர்கள் சரியான தருணத்தில் விழித்து கொண்டுள்ளார் . பின்னர் பிஜேபி வலையில் சிக்கியிருந்த தங்கள் எம் எல் ஏக்களை தொடர்பு கொண்டு அவர்களின் மன நிலையை மாற்றியுள்ளனர் . இதன் வாயிலாக ஆட்சி கவிழ்வதில் இருந்து தப்பியதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. ஆபரேஷன் தாமரை குழு பிரமுகர்கள் காங்கிரஸ் எம் எல் ஏக்களை ஓட்டல்களில் சந்தித்து மற்றும் அவர்களின் வீடுகளில் சந்தித்துள்ள தகவல் கசிந்த உடனேயே காங்கிரஸ் தலைவர்கள் விழித்து கொண்டு மேற்கொண்ட நடவடிக்கைகளால் பிஜேபியின் ஆபரேஷன் தாமரை நடவடிக்கை வெற்றி பெறவில்லை . தவறியிருந்தால் 25 எம் எல் ஏக்கள் விமானத்தில் டெல்லிக்கு பறந்து காங்கிரசுக்கு டாடா சொல்லியிருக்கும் பணி இந்நேரத்திற்கு முடிந்திருக்கும் என தெரியவந்துள்ளது. பிஜேபியின் சூழ்ச்சியை அறிந்த சில எம் எல் ஏக்கள் இது குறித்து முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல் டி ke சிவகுமார் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர். உடனே பிஜேபியின் சூழ்ச்சி குறித்து எம் எல் ஏ ரவி கனிகா இது குறித்து பொதுவில் வெளிப்படுத்தி அனைத்தையும் போட்டு உடைத்துள்ளார். இதனால் பிஜேபியின் முயற்சிகள் தோல்வி அடைந்தது. பி je பியின் வலையில் சிக்கிய 25 எம் எல் ஏக்கள் டெல்லிக்கு செல்லவும் தாயாராய் இருந்தனர்.. அனால் பின்னர் நமக்கு இந்த தலைவலியே வேண்டாம் என அமைதியாயினர் . பின்னர் காங்கிரஸ் தலைவர்கள் அனைத்து 25 எம் எல் எங்களையும் சந்தித்து பேசி உண்மையான நிலைமைகள் குறித்து விளக்கி பிஜேபியின் கவற்சிகளுக்கு மயங்க வேண்டாம் இதற்க்கு முன்னர் பிஜேபிக்கு சென்றவர்களின் நிலை என்ன என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். இந்த ஆட்சி ஐந்து ஆண்டுகள் நடந்தால் உங்களின் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும். தவிர உங்கள் தொகுதிகளின் வளர்ச்சிக்கு போதுமான நிதி ஒதுக்கப்படும். இதில் அவசரப்படவேண்டாம் என கூறி எம் எல் ஏக்களை சமாதான படுத்தி மனம் மாற்றியுள்ளனர். எம் எல் ஏ ரவி கனகி செய்தியாளர்கள் கூட்டத்தில் பிஜேபியின் தந்திரம் குறித்து பகிரங்கப்படுத்தியிருக்கவிட்டால் இந்த நேரத்திற்கு அரசு என்னவாயிருக்கும் என்பது தெரியாது. ஆனாலும் நாங்கள் விழித்துக்கொண்டோம் என பிஜேபி வழியில் சிக்கிய எம் எல் ஏக்கள் இப்போது நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார் . இந்த நிலையில் தற்போதைக்கு ஆபரேஷன் தாமரை திட்டத்தை நிறுத்திவைத்து அடுத்து என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க பிஜேபி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.