அரிசிமாவு ரொட்டி


தேவையான பொருட்கள்:
அன்னம் – ஒரு கப்
அரிசி மாவு – அரை கப்
மைதா மாவு (கோதுமை மாவு) – கால் கப்
அறுத்த வெங்காயம் – இரண்டு
அறுத்த தக்காளி – ஒன்று
நறுக்கிய கொத்துமல்லி மற்றும் கறிவேப்பிலை – சிறிதளவு
நறுக்கிய பச்சைமிளகாய் – இரண்டு
துருத்திய கேரட் – ஒன்று
துருத்திய இஞ்சி – ஒரு அங்குலம்
உப்பு – ருசிக்கேற்ப மற்றும் நெய் – சிறிதளவு
செய்யும் முறை: ஒரு பவுலில் நன்றக குழைத்த அன்னம், அரிசி மாவு , மைதா மாவு , வெங்காயம் , நறுக்கிய காய்கள், உப்பு , இஞ்சி , பச்சைமிளகாய் கொத்துமல்லி , கறிவேப்பிலை அனைத்தையும் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும். இதை ஒரு சுமாரான பந்து அளவில் உருண்டைகளாக்கிக்கொள்ளவும். அதை ரொட்டி மாதிரியில் தரட்டிக்கொள்ளவும். பின்னர் இதை நன்றாக காய்ந்த தவாவின் மீது போட்டு சிறிதளவு நெய் ஊற்றி சுட்டால் சுவையான அரிசிமாவு ரொட்டி உண்பதற்கு தயார். இந்த ரொட்டியில் ஏதாவது கீரைகள் மற்றும் காய்களையும் சேர்த்து கொள்ளலாம்.