புதுச்சேரி செப் 28-
அரியாங்குப்பம் தவளக்குப்பத்தில் புதுச்சேரி – கடலூர் சாலையோரம் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான அரிசி ஆலை உள்ளது. இந்த ஆலையில் உள்ள ஜெனரேட்டரில் நேற்று காலை எதிர்பாராத விதமாக மின்கசிவு தீப்பிடித்து எரிந்தது.
இதை பார்த்த அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதுபற்றி தகவல் அறிந்த புதுச்சேரி தீயணைப்பு நிலையவீரர்கள் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதற்குள் ஜெனரேட்டர் முழுவதுமாக எரிந்து சேதமானது.