அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிடாதது ஏன் -சி.டி. ரவி கேள்வி

பெங்களூர், மார்ச் 7- பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று முழக்கமிட்ட மூன்று பேர் கைது செய்யப் பட்டது சரிதான். ஆனால், எவ்வாறாயினும் எஃப்.எஸ்.எல். அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளிப்படவில்லை. என்று பிஜேபியின் தேசிய பொதுச் செயலாளர், முன்னாள் அமைச்சர் சி.டி. ரவி கேள்வி எழுப்பியுள்ளார். பெங்களூரில் உள்ள மாநில பிஜேபி அலுவலகத்தில் செய்தியாளரிடம் அவர் கூறியதாவது கைது செய்யப்பட்டவர்கள் காங்கிரசின் செயல்வீரர்களாக இருக்க வேண்டும் என்று நினைத்தோம்.
ஆனால் அவர் ராகுல் காந்தியுடன் தொடர்பு இருப்பது எங்களுக்கு தெரியாது. தற்போது அவர் ராகுல் காந்தியை கட்டிப்பிடித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தான் ஜிந்தாபாத் உறவு நாம் நினைத்ததற்கு அப்பாற்பட்டது. பாகிஸ்தானிய அப்பா அம்மாவுக்கு பிறந்த துரோகிகள் தான் சப்தம் போட்டனர் என நினைத்தோம்.துரோகிகளும் காங்கிரஸ் தலைவர்களும் கட்டிப்பிடிப்பது எங்களுக்கு தெரியாது.கட்டிப்பிடித்ததால் எஃப்.எஸ்.எல். அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.எஃப்.எஸ்.எல். அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிட வேண்டும்.
இச்ச சம்பவம் நடந்த மறுநாள் அமைச்சர் பிரியங் கார்கே, அப்படி பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று சத்தம் போடவில்லை என்றார்.
அறிக்கை கிடைத்ததும் அதை அதிகாரப் பூர்வமாக வெளியிடாதது ஏன்? ராமேஸ்வரம் கபே ஹோட்டலில் நடந்த வெடிகுண்டு தொடர்பாக அமைச்சர்கள் ஒவ்வொருவரிடமும் விதவிதமான அறிக்கைகள் வெளியிட்டு வருகிறார்கள். வெடிகுண்டு வைத்தது பிஜேபி சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர்.இது ஒன்றும் புதியதல்ல. இது பழைய நோய்தான். நேற்றைய நோயல்ல.
இதே போல 2000 ம் ஆண்டில் தேவாலயங்கள் மீது குண்டு வீசப்பட்டு தாக்கப்பட்டது. அப்போது உள்துறை அமைச்சராக மல்லிகர்ஜுன கார்கே பதவியில் இருந்தார். அவர், விசாரணைக்கு முன்னதாகவே இது ஆர்எஸ்எஸ் பின்னணியில் நடந்த சதி என்றார்.
அரசாணை வெளியிட்ட பின்னர் குற்றவாளி கைது செய்யப் பட்டபோது, விசாரணைக்கு பாகிஸ்தான் தூண்டப்பட்ட பயங்கரவாத அமைப்பு என தெரியவந்தது.வெடி விபத்தில் பயங்கரவாதியும் கொல்லப்பட்டார். அப்போது தீவிரவாதியை பாதுகாக்க காங்கிரஸ் அமைச்சர் அறிக்கை விடுகிறாரா? இதுபோன்ற விஷயங்களில் அரசியல் செய்யக்கூடாது என முதல்வர் சித்தராமையா கூறுகிறார். இதை எப்படி நாம் ஏற்க முடியும். கர்நாடக மாநிலத்தில் 222 தாலுகாக்கள் வறட்சியில் தத்தளிக்கிறது. பொறுப்பான அமைச்சர் கள் வறட்சி பகுதிகளை பார்வையிட்டு முறையான நடவடிக்கை யை இதுவரை எடுத்தப் பாடில்லை. இதுதான் காங்கிரஸ் ஆட்சி என்றார்.