அலகாபாத் உயர் நீதிமன்றக் கண்டனத்துக்குள்ளான சிபிஐ

புதுடெல்லி: அக். 19-
உத்தரப் பிரதேசத்தின் நிதாரி தொடர் கொலை வழக்கின் பின்னணி மிகுந்த திகில் நிரம்பியது. நாட்டையே உலுக்கிய அந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை விடுவித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், சிபிஐயின் விசாரணையை கடுமையாகக் கண்டித்துள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டில் உ.பி.யின் நொய்டாவின் செக்டார் குடிசைப்பகுதியைச் சேர்ந்த 31 ஏழை குடும்பங்களின் குழந்தைகள் தொடர்ந்து காணாமல் போவதாக செய்திகள் வெளியாகின. இவர்களை போலீஸாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை எனப் புகார்கள் கிளம்பின.
இதில் கடைசியாக அக்டோபர் 2006-ல் பாயல் எனும் இளம் பெண்ணும் காணாமல் போனதாக வழக்கு பதிவானது. பாயலைத் தேடியபோது அவருடைஇய கைப்பேசி ஒரு ரிக்ஷா ஓட்டுநரிடமிருந்து போலீஸாரால் மீட்கப்பட்டது.
அந்த கைப்பேசியை செக்டார் 31 இல் உள்ள டி-5 எனும் பங்களாவின் பணியாளர் தனக்கு கொடுத்ததாக ரிக்ஷாக்காரர் கூறினார். அதனைத் தொடர்ந்து நிதாரி கிராமத்தின் அந்த டி-5 பங்களாவின் பணியாளரான சுரேந்தர் கோலி போலிஸாரிடம் சிக்கினார். இவ்வழக்கில் உடல் உறுப்புகள் திருட்டு நடந்திருக்கலாம் அதையும் விசாரிக்க மத்திய குழந்தைகள் மற்றும் மகளிர் நலன் அமைச்சகக் குழு பரிந்துரைத்திருந்தது. இதன் பிறகு அந்த விசாரணை நடைபெறாதது துரோகத்துக்கு இணையானது. இதன்மூலம், பொதுமக்களின் நம்பிக்கையை விசாரணை அமைப்பு இழந்து விட்டது.’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதுபோல், மேலும் பல புகார்கள் சிபிஐ மீது உயர் நீதிமன்றம் அடுக்கியுள்ளது. அதிக ஆர்வம் இன்றி நடத்தப்பட்ட விசாரணையில் பலதவறுகள் நடந்திருப்பது ஏன்? எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
குற்றவாளிகளைக் கைது செய்து 60 நாட்களாக சிறையில் வைத்தபின் அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தியுள்ளதாகவும் கண்டித்துள்ளது. உலக அளவில் இதுவரை நடந்திராத வகையிலான சம்பவத்தில் சிபிஐ மீது புகார்தாரர்கள் வைத்த நம்பிக்கை வீணாகி இருப்பதாகக் கருதப்படுகிறது.
இதனால், சிபிஐ விசாரணையின் நடவடிக்கைகள் கேள்விக்குறியாகி உள்ளன. இருப்பினும், இந்தத் தீர்ப்பின் மீது சட்ட ஆலோசனைகளைப் பெற்று நிதாரி வழக்கில் மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தொடுக்கத் தயாராகி வருகிறது.
நிதாரி சம்பவத்தால் அப்போது ஆட்சி செய்த சமாஜ்வாதி அரசின் மீது நிதாரிவாசிகள் கடும் கோபம் அடைந்தனர். அவர்கள் பலமுறை நொய்டா போலீஸார் மீது கல்வீச்சுக்களை நடத்தினர்.
உபி போலிஸாரிடம் வந்த புகார்கள் மீது பொறுப்பான விசாரணை நடந்திருந்தால், இந்த சம்பவங்கள் நடந்திருக்காது என்ற கருத்து எழுந்தது. இதன் காரணமாக, நொய்டாவின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 30 போலீஸார் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டனர்.
காங்கிரஸ் தலைவரான சோனியா உள்ளிட்ட பல கட்சிகளின் அரசியல்வாதிகள் நிதாரி சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளித்தனர். இவர்களிடம் பாதிக்கப்பட்டவர்கள் கோரியதன் பேரில் நிதாரி வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிபிஐ நீதிமன்றத்தில் ஒருநாள் குற்றவாளிகள் மீது கடும் கோபமான வழக்கறிஞர்களும், பாதிக்கப்பட்டவர்களும் இருவர் மீதும் நீதிமன்றத்திலேயே தாக்குதல் நடத்தினர். இதில், ரத்த வெள்ளமான குற்றவாளிகளை போலீஸார் காப்பாற்றியது நினைவுகூரத்தக்கது.