ஆகஸ்டு 5ம் தேதி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி, ஜூலை 31 – பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, அவை நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக இதுவரை 25-க்கு மேற்பட்ட எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். இந்நிலையில், விலைவாசி உயர்வு, வேலையின்மை, பணவீக்கம் ஆகியவற்றைக் கண்டித்து ஆகஸ்டு 5-ம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மேலும், பிரதமர் இல்லத்தை முற்றுகையிடவும் முடிவு செய்துள்ளதாக அக்கட்சிதெரிவித்துள்ளது