ஆக்சிஜன் பற்றாக்குறை 24 பேர் சாவு


சாம்ராஜ் நகர். மே 3-
ஆக்சிஜன் பற்றாக்குறையால் 24 நோயாளிகள் பலியானார்கள். இந்த துயர சம்பவம் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் நடந்துள்ளது. சாம்ராஜ்நகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு ஆக்சிஜன் வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு இவர்களுக்கு வழங்கப்பட்ட ஆக்சிஜன் திடீரென காலியாகிவிட்டது. உடனடியாக வழங்க வேறு ஆக்சிஜன் இல்லை. இதையடுத்து ஒவ்வொரு நோயாளிகளாக காற்றை இழுக்க போராடி காற்று கிடைக்காமல் பரிதாபமாக உயிரை விட்டனர். மொத்தம் 24 உயிர்கள் பறிபோனது இது பற்றி அறிந்து பலியான உறவினர்கள் மருத்துவமனை முன்பு நூற்றுக்கணக்கில் குவிந்தனர் கதறி அழுது துடித்தனர் மருத்துவமனை நிர்வாகத்தின் மீதும் டாக்டர்கள் மீது கோபம் கொண்டு சாபம் விட்டு அழுது புரண்டனர்

ஆக்சிஜன் பற்றாக் குறை இருப்பதை மாவட்ட சுகாதார பொறுப்பு அதிகாரி மற்றும் அதிகாரிகள் கண்டு கொள்ளாதது ஏன் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சுரேஷ் குமார் இதில் கவனம் செலுத்தாதது ஏன் கர்நாடக அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்று பல்வேறு கேள்விகளை எழுப்பி மிகுந்த ஆவேசத்துடன் அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். நெஞ்சை உலுக்கும் இந்த சம்பவம் கர்நாடக மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி உட்பட வட மாநிலங்களில்தான் ஆக்சிஜன் இல்லாமல் அதிகமான பேர் பலியாகி வரும் சூழ்நிலையில் அந்த நிலை இப்போது கர்நாடக மாநிலத்திலேயே வந்துவிட்டது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி அறிந்த முதலமைச்சர் எடியூரப்பா அதிர்ச்சி அடைந்தார் உடனடியாக மாவட்ட சுகாதார அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்புகொண்டு நடந்த விபரங்களைக் கேட்டு அறிந்தார் இதுகுறித்து விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார் அலட்சியமாக நடந்து கொண்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 24 நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட ஆக்சிஜன் நள்ளிரவில் தீர்ந்துவிடும் என்பது அரசு மருத்துவமனை பொறுப்பு அதிகாரிகளுக்கு தெரியாதா அவர்கள் முன்கூட்டியே தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கொண்டுவந்து வைக்காதது ஏன் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. இத்தனை உயிர்கள் பலி பணத்திற்கு கர்நாடக அரசின் அலட்சியமே காரணம் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. கர்நாடக அரசு தரப்பில் இதுகுறித்து கூறும்போது இந்த துயரமான சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி இதற்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் இனி மாநிலத்தில் எந்த ஒரு மருத்துவ மனையிலும் இதுபோன்ற சம்பவம் நடக்காதவாறு தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது