ஆக்ஸிஜன் இல்லாமல் 24 பேர் சாவு நீதி விசாரணைக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்


பெங்களூர், மே 4 – கர்நாடக மாநிலம் சாமராஜநகரிலா அரசு மாவட்ட மருத்துவமனையில் 2ம் தேதி இரவு
ஆக்ஸிஜன் கிடைக்காமல் 24 கோவிட் நோயாளிகளின் பரிதாபமாக பலியானார்கள். இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்துவது பொருத்தமானதாக இருக்கும். இது குறித்து தனது நிலைப்பாட்டை அரசு அறிவிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
.கோவிட் தொற்று கட்டுப்பாடு மற்றும் சிகிச்சை தொடர்பாக பல்வேறு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஓகா மற்றும் மூத்த நீதிபதி அரவிந்த்குமார் ஆகியோர் முன்னிலையில் இவை விசாரணைக்கு வந்தது. சாம்ராஜ்நகர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் 24 நோயாளிகள் பலியானது குறித்து இந்த நீதிமன்ற அமர்வு மிகுந்த கவலைக் கொள்வதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்
அட்வகேட் ஜெனரலிடம் எத்தனை பேர் இறந்துவிட்டார்கள், என்ன காரணங்கள் என்று நீதிபதி கேட்டார்., ஆக்ஸிஜன் குறைபாட்டால் நோயாளிகள் இறந்தார்களா என்பது குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை. இந்த மரணங்களுக்கு என்ன காரணம் என்று கண்டுபிடிக்க ஒரு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த அறிக்கை புதன்கிழமை மாலைக்குள் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசு தயாராக இருப்பதாக அட்வகேட் ஜெனரல் உறுதியளித்தார்.
நோயாளிகள் ஆக்ஸிஜன் இல்லாமல் இறக்கின்றனர் என்பது மிக மோசமான சூழ்நிலை. இது நீதித்துறை விசாரணைக்கு சமர்ப்பிக்க வேண்டிய ஒரு வழக்கு. மாநில அரசு தனது நிலைப்பாட்டு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது