ஆக.,24 வரை தமிழகத்தில் மழை

சென்னை : ஆகஸ்ட் 19 ‘தமிழகம், புதுச் சேரியில் இன்று முதல், 24ம் தேதி வரை மழை பெய்யும்’ என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிஷா கடலோர பகுதிகளுக்கு அப்பால், காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, இன்று தெற்கு ஒடிஷா, வடக்கு ஆந்திரா கடலோர பகுதிகளை கடக்கக் கூடும். மத்திய கிழக்கு – தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியிலும், ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதனால், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் மழை பெய்யும்.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 24ம் தேதி வரை மழை பெய்யும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.