ஆங்கில பெயர் பலகைகளை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பிபிஎம்பி

பெங்களூரு, பிப். 6: பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நிறுவனம், கடைகளின் பெயர்பலகையில் எழுத்தப்பட்டுள்ள ஆங்கில பெயர்களை அழிக்கும் பணியில் பிபிஎம்பி ஈடுபட்டுள்ளது.பிப்ரவரி மாத இறுதிக்குள் 60% பெயர் பலகைகளை கன்னடத்தில் வைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பிபிஎம்பி கடைகள், நிறுவனங்களின் பெயர்பலகைகளில் உள்ள ஆங்கில எழுத்துகளை அழிக்கத் தொடங்கியுள்ளது.
இருப்பினும், விதிகளை சீரற்ற முறையில் செயல்படுத்தப்படுவதால், பிபிஎம்பியின் உத்தரவை நிறுவனம் மற்றும் கடை உரிமையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
பிரிகேட் சாலையில் நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் தெளிவாகத் தெரிகிறது, அங்கு விதிகளை பின்பற்றி உள்ள‌ கடைகளில் கூட ஆங்கில எழுத்துகள் அழிக்கப்படுகின்றன.
சில கடைகள் லோகோக்களை மூடுவதைப் பற்றி கவலைப்படுகின்றன. மேலும் பெயர் பலகைகளில் உள்ள விளக்கமான உள்ளடக்கத்திற்கு பிபிஎம்பியின் கன்னட விதி பொருந்துமா என்று தெரியவில்லை.
டிசம்பரில், பிபிஎம்பி இது தொடர்பான உத்தரவு பிறப்பித்தது. நிறுவனம், கடைகளின் பெயர் பலகையில் 60% கன்னடத்தில் இருக்க வேண்டும் என்று கூறியது. பிபிஎம்பியின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், பெயர்ப் பலகையின் மேல் கன்னடத்தை முக்கியமாகக் காண்பிக்கும் கடை உரிமையாளர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றார்.
பிரிகேட் சாலையில் உள்ள கடை உரிமையாளர் ஒருவர், 60% கன்னட விதியை அமல்படுத்துவதில் பிபிஎம்பி அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை. இணங்குவதை கட்டாயப்படுத்தும் எந்தவொரு சட்டமும் இல்லை அவர் சுட்டிக்காட்டினார்.
விதிமுறைகளை மீறும் நிறுவனங்களின் வர்த்தக உரிமங்களை ரத்து செய்யப்போவதாக எச்சரித்து, பிபிஎம்பி இதுவரை 35,000 நிறுவனம், கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.