ஆசிய விளையாட்டு போட்டி:இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம்

சீனா , செப் 28-6-வது நாளாக இன்று ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 6 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களைப் பெற்றுள்ளது.ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு ரவுண்ட் ஆப் 32 போட்டியில் இந்தியா- மாலத்தீவு மோதின. இதில், 1-3 என்ற செட் கணக்கில் மாலத்தீவரை வீழத்தி இந்தியா வெற்றிப்பெற்றுள்ளது. இதேபோல், ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு ரவுண்ட் ஆப் 32ல் இந்தியா- மங்கோலியா மோதின. இதில், 3-0 என்ற செட் கணக்கில் மங்கோலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றிப்பெற்றுள்ளது. டேபிள் டென்னிஸ்: 32வது சுற்றில் இந்திய ஜோடி மானவ் தக்கர் மற்றும் மனுஷ் ஷா 3-1 (11-8, 9-11, 11-6, 11-2) என்ற செட் கணக்கில் மாலத்தீவின் மூசா முன்சிப் அகமது மற்றும் முகமது ஷஃபான் இஸ்மாயில் ஜோடியை வீழ்த்தி 16-வது சுற்றுக்கு முன்னேறியது. ஸ்குவாஷ் போட்டியில் பெண்களுக்கான குழு பூல் பி பிரிவில் இந்தியா- மலேசியா மோதின. இதில், இந்தியாவை 1-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி மலேசியா வென்றது.