ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

ஹாங்சோவ், செப். 25-
ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் ஆடவர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய அணி தங்க பதக்கம் வென்றுள்ளது.துப்பாக்கி சுடுதல் பிரிவில் குர்னேஷ் பட்டேல், திவியன்ஷ் பன்வார், ஐஸ்வரி தோமர் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1893.7 புள்ளிகள் பெற்று இந்திய அணி தங்கம் வென்றது. ஆசிய விளையாட்டு தொடரில் இந்தியா நேற்று ஐந்து பதக்கங்களுடன் ஏழாவது இடத்தில் உள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் ஆடவர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய அணி தங்க பதக்கம் வென்றுள்ளது. துப்பாக்கி சுடுதல் Series 6: 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியா புதிய சாதனை படைத்தது. 1893.7 புள்ளிகள் பெற்று இந்தியா இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 19- ஆம் தேதி பாகுவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தொடரில் சீனா வைத்த ரெக்கார்ட் ஆன 1893.3 புள்ளிகள் என்பதை இந்தியா இன்று முறியடித்துள்ளது.