பெய்ஜிங், செப்டம்பர். 24 – ஆசிய விளையாட்டு போட்டியில் துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி வெள்ளி பதக்கத்தை உறுதி செய்துள்ளது. 8 வீரர்களுக்கான துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி வெள்ளி வென்றுள்ளது. 5.43 நிமிடங்களில் இலக்கை கடந்து இந்தியா பதக்கம் வென்றுள்ளது.
முன்னதாக துடுப்பு படகு போட்டியில் இந்திய அணிக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது.
ஆண்கள் இணை துடுப்பு படகு இறுதி போட்டியில் இந்தியாவின் பாபு பால் மற்றும் லெக் ராம் ஜோடி வெண்கல பதக்கம் வென்றது. 6:50.41s நேரத்தில் இலக்கை கடந்து இந்திய அணி வெண்கலம் வென்றது.