ஆசிரியரை கடத்தி துப்பாக்கி முனையில் கட்டாய திருமணம்

பாட்னா: பிஹார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தைச் சே்ரந்தவர் கவுதம் குமார். இவர் அண்மையில் நடைபெற்ற மாநில அரசு பணியாளர் ஆணையத் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு ஒரு கும்பல், கவுதம் பணியாற்றும் பள்ளிக்கு வந்து அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றது. மேலும்கடத்தப்பட்ட 24 மணி நேரத்துக்குள், துப்பாக்கி முனையில் தனது மகளுக்கு செங்கல் சூளை அதிபரான ராஜேஷ் ராய் என்பவர் கட்டாயத் திருமணம் செய்து வைத்துள்ளார்.
திருமண ஏற்பாடுகளை தயார்நிலையில் வைத்த பின்னரேகடத்தல் சம்பவம் அரங்கேறியுள்ளது. திருமண வீட்டுக்கு கவுதம்கொண்டு வரப்பட்டதும் தனது மகள் சாந்தினிக்கு தாலி கட்டுமாறு கவுதம் குமாரை துப்பாக்கி முனையில் மிரட்டினார் ராஜேஷ் ராய். அவரும் பயத்தில்சாந்தினிக்கு தாலி கட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து பிஹார்போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் வைஷாலிபோலீஸார் விசாரித்து வருகின்றனர். வைஷாலி மாவட்ட மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, பிஹாரின் வைஷாலி மாவட்டத்தில்தான் இந்தக் கடத்தல் சம்பவம் நடந்துள்ளது. காணாமல்போன ஆசிரியரைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கையை போலீஸார் தொடங்குவதற்கு முன்னதாக, குமாரின் குடும்பத்தினர் அன்றைய இரவே சாலை மறியலில் ஈடுபட்டனர்.திருமண முன்மொழிவை ஏற்க மறுத்த கவுதம் குமாரை ராஜேஷ் ராய் குடும்பத்தார் தாக்கியுள்ளதாகத் தெரிகிறது. அவர் உடல் ரீதியான வன்முறைக்கும் உள்ளாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்துள்ளோம் என்றார்.