ஆடம்பர வாழ்க்கை வாழ வழிப்பறி : இருவர் கைது

பெங்களூர் : மே. 30 – தனியாக சென்றுகொண்டிருப்பவர்களை குறி வைத்து அவர்களை பின் தொடர்ந்து அவர்களிடமிருந்து மொபைல்கள் மற்றும் தங்க சங்கலிகளை அபகரித்துக்கொண்டு தப்பியோடி அவற்றை அடகு வைத்து ஆடம்பர வாழக்கை வாழ்ந்துவந்த இரண்டு கொள்ளையர்களை கைது செய்துள்ள கே ஆர் புரம் போலீசார் இவர்களிடமிருந்து 4.60 லட்சங்கள் மதிப்புள்ள பொருள்களை கைப்பற்றியுள்ளனர். கே ஆர் புரம் தூர்வாணிநகரை சேர்ந்த சக்திவேல் என்ற சக்தி (19) மற்றும் கும்பார் வீதியின் விஜய் (19) ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ள குற்றவாளிகள். இவர்களிடமிருந்து 67 கிராம் எடையுள்ள இரண்டு மாங்கல்ய செயின்கள் , சாம்சுங்க் , விவோ , ஒப்போ நிறுவனங்களின் 10 மொபைல் போன்கள் உட்பட 4.60 லட்ச ரூபாய்கள் மதிப்புள்ள பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என டி சி பி எஸ் கிரீஷ் தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் பைக்குகளில் சென்றபடியே ஆளரவமற்ற பகுதிகளில் தனியாக செல்பவர்களை பின் தொடர்ந்து மற்றும் வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி அவர்களை மிரட்டி மொபைல்கள் மற்றும் தங்க சங்கலிகளை அபகரித்துக்கொண்டு தப்பிவந்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து கொண்ட கே ஆர் புரம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு நம்பகமான தகவல்களின் பேரில் குற்றவாளிகளை கைது செய்த்துள்ளனர். குற்றவாளிகள் ஆடம்பர வாழ்க்கை வாழ வழிப்பறி செய்த மொபைல் போன்கள் மற்றும் தங்க நகைகளை கே ஆர் புரத்தில் உள்ள ஆஸ்டிமன் ஜெயின் ராஜ் என்ற அடகு கடையில் அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளனர். குற்றவாளிகளிடமிருந்து திருடப்பட்ட பொருள்களை அடமானம் வைத்துக்கொண்ட அடகு கடை உரிமையாளர் ஷுபம் என்பவரையும் வசத்தில் எடுத்து விசாரிக்கப்பட்டு வருவதாக டி சி பி எஸ் கிரீஷ் தெரிவித்தார்.