ஆடியோ வைரல் ஆன நிலையில் மடாதிபதி காலமானார்

பெலகாவி, செப்.5- பெலகாவி பைலஹோங்கலா தாலுகாவில் உள்ள நெகினாலாவைச் சேர்ந்த குரு மடிவாளேஸ்வரர் மடத்து சுவாமிகள், பெண்ணுடன் பேசிய ஆடியோ வைரலான நிலையில் திடீரென காலமாகி உள்ளார். இவரது மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. குரு மடிவாளேஸ்வரர் மடத்தின் மடாதிபதி பசவ சித்தலிங்க சுவாமிஜி காலமானார். சில நாட்களுக்கு முன் பசவ சித்தலிங்க சுவாமிகள் இரண்டு பெண்களிடம் பேசிய ஆடியோ வைரலாக பரவியது. சித்ரதுர்கா முருகாசரண் மீது பாலியல் புகார் எழுந்ததை அடுத்து இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதனால் மனமுடைந்த சுவாமிஜி, மரணம் அடைந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் நடந்த இடத்திற்கு பைலஹொங்கல போலீசார் சென்று விசாரணை நடத்தினார்.