ஆடு- கோழி பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்

ஈரோடு பவானிசாகர் பவானிசாகர் வனப்பகுதியில் உள்ள கெஜலெட்டி ஆதி கருவண்ணராயர் கோவில் பொங்கல் விழாவையொட்டி ஆடு மற்றும் கோழிகளை பக்தர்கள் பலியிட்டு தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர். ஆதி கருவண்ணராயர் கோவில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்டது பவானிசாகர் வனப்பகுதி. இந்த வனப்பகுதியில் தெங்குமரஹடா கிராமத்துக்கு செல்லும் வழியில் அடர்ந்த வனப்பகுதியில் கெஜலெட்டி என்ற இடத்தில் பிரசித்தி பெற்ற ஆதி கருவண்ணராயர், பொம்மா தேவி கோவில் உள்ளது. தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களை சேர்ந்த உப்பிலி நாயக்கர் சமுதாய மக்களுக்கு இந்த கோவில் குலதெய்வ கோவிலாக உள்ளது. நேர்த்திக்கடன் இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் பவுர்ணமியையொட்டி 3 நாட்களுக்கு பொங்கல் விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று கோவிலில் பவுர்ணமி பூஜை நடைபெற்றது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் சாமி அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர். பின்னர் தாங்கள் கொண்டு வந்த ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். பாதுகாப்பு இதையொட்டி கோவிலை சுற்றிலும் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வனத்துறையினர் மற்றும் போலீசார் தீவிர பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். வனவிலங்குகள் கோவில் வளாக பகுதிக்கு வராமல் இருக்க தடுப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டனர். இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு கோவில் விழா நிறைவு பெறுகிறது.