ஆட்சி கவிழ்க்க பிஜேபி சதி பலிக்கவில்லை

பெங்களூர்,அக்.28- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கர்நாடக மாநில காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பிஜேபி செய்து வரும் சதி திட்டம் பலிக்காது என்று துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் கூறினார்.ஐதராபாத் செல்வதற்கு முன் இன்று காலை சதாசிவநகரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கர்நாடக மாநில காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பிஜேபி சதி செய்வதை நாங்கள் அறிவோம். இதற்குப் பின்னால் பெரிய தலைவர்கள் இருக்கிறார்கள். என்ன செய்தாலும் அரசை வீழ்த்த முடியாது என்றார். பாஜகவின் முயற்சி குறித்து மாண்டியா எம்எல்ஏ ரவிகனிகா கூறியதற்குப் பதிலளித்த அவர், “எங்கள் எம்எல்ஏக்களை ஈர்க்க பாஜக முயற்சிப்பதும், ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்வதும் ஆரம்பத்தில் இருந்தே எங்களுக்குத் தெரியும். ஆனால் எதுவும் நடக்கவில்லை. அரசு வலுவாக இருக்கும் என்றார்.
கட்சியின் சில எம்எல்ஏக்கள் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் முதலமைச்சராக வருவார் என்று கூறியதற்கு பதிலளித்த அவர், இவை அனைத்தும் கட்சியின் உள்கட்சிப் பிரச்னைகள் என்றார். அக்கட்சியின் எந்த எம்.எல்.ஏ.வும் இதுபோன்ற கருத்தை வெளியிடக்கூடாது என்றார்.இது தொடர்பாக தேவையில்லாமல் கருத்து தெரிவிக்கும் எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
கட்சி உள்கட்சி பிரச்னைகளை ஊடகங்கள் முன் பேச வேண்டாம் என ஏற்கனவே எம்எல்ஏக்கள் மற்றும் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்குப் பிறகும் அறிக்கை வெளியிட்டால் நோட்டீஸ் அனுப்பப்படும் என்றார்
கடந்த காலங்களில் பாஜக ஆட்சியை கவிழ்க்க முயன்றதாக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறியதுடன், பாஜக எம்எல்ஏக்களை கவர்ந்து இழுக்கும் ஆவணங்களை சட்டசபையில் வெளியிடுவேன் என்று கூறியிருந்தார். இத்தனைக்கும் மத்தியில் காங்கிரஸ் எம்எல்ஏ ரவிகனிகா, உள்ளிட்ட எம்எல்ஏக்கள் நேற்று கூறும் போது எங்களை காங்கிரஸை விட்டு பிஜேபியில் எடுக்க பிஜேபி தலைவர்கள் முயற்சி செய்தனர் எடியூரப்பாவின் முன்னாள் நெருங்கிய உதவியாளர் என்.ஆர்.சந்தோஷ், சில காங்கிரஸ் எம்எல்ஏக்களை சந்தித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் சாராவை சந்திக்க அழைத்து உள்ளார். பா.ஜ.,வில் சேர்ந்த பின், அமைச்சர் பதவியும், 50 கோடியும் தருவதாக ஆசை வார்த்தை காட்டினார். எனவே இதை முதல்வர், துணை முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்றதாக, தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது