ஆட்டிறைச்சி சீட்டு பெயரில் மோசடி: ஒருவர் கைது

பெங்களூரு, ஏப்.4- உகாதி பண்டிகையையொட்டி ஆட்டிறைச்சி சீட்டு என்ற பெயரில் மோசடி செய்த நபர்களை பேட்டராயனபுரா போலீசார் கைது செய்தனர்.
ஆட்டிறைச்சி சீட்டு என்ற பெயரில் சுமார் ஐந்தாயிரம் பேரிடம் இருந்து மாதம் ரூ.4,800 வசூலித்து, பண்டிகை நெருங்கும்போது போனை அணைத்துவிட்டு, கைதான குற்றவாளி புட்டசாமி கவுடா என அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஆட்டிறைச்சி சீட்டு என்ற பெயரில் பேட்டராயனபுரா, கிரிநகர் சுற்றுவட்டார பகுதிகளில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் பணம் வாங்கிய புட்டசாமி கவுடா பின்னர் தலைமறைவானார்.
ஆட்டிறைச்சி சீட்டு கட்டி ஏமாற்றிய நபர் மீது பேட்டராயனபுரா காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் போனை அணைத்துவிட்டு தலைமறைவான குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.